ITamilTv

coimbatore | கல்வி துறைக்கு கிடைத்த நன்கொடை இவ்வளவா? அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

Minister Anbil Mahesh

Spread the love

coimbatore | தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆதார் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கோவை மண்டலத்தில் மட்டும் 448 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு நன்கொடையாக கிடைக்கப் பெற்தள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளிலேயே ஆதார் அடையாள அட்டையை குழந்தைகள் பெரும் வகையில்,

மாநில அளவிலான சிறப்பு முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

coimbatore

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,காளப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆதார் அடையாள அட்டை முகாம் இன்று மாநில அளவில் தொடங்கி

வைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் அந்தந்த பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்களுக்கு தேவையான ஆதார் அடையாள அட்டைகளை

பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதற்கென்று தனியாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆதார் அடையாள அட்டை மட்டுமல்லாது பிள்ளைகளுக்கு தேவையான ஜாதி சான்றிதழ், வருமானவரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றையும் முறையாக வழங்க

இதையும் படிங்க: fishermen issue | ”பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு..” அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்!

வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளோம் எனவும் அதற்கான பணிகள் இன்னமும் ஒரு மாத காலத்திற்குள் முடிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்றும்

தற்போது பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி என்பது நான்காவது மண்டல மாநாடாக இங்கு நடத்தியுள்ளோம் என்றும் கூறியதுடன் இதில் திருப்பூர், கோவை, நீலகிரி

மற்றும் ஈரோடு மாவட்டங்களை சார்ந்த பெற்றோர்களும் ஆசிரிய பெருமக்களும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.

இந்த மாநாட்டின் முக்கியமான நோக்கம் முதல்வர் கொண்டு வருகின்ற திட்டங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் எனவும்,

கிட்டத்தட்ட 52 வகையான திட்டங்களை கொண்டு வந்துள்ள நிலையில் அந்த திட்டங்களை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,

அதேபோல் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துகின்ற விதமாகவும் நடத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1760973558824722792?s=20

குறிப்பாக கடந்த காலங்களில் பெற்றோர்கள் சார்பாக அரசு பள்ளிகளுக்கு பல கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் (coimbatore) நன்கொடையாளர்கள் நன்கொடையை வழங்கியுள்ளதாகவும்,

மதுரையில் பூரணம் அம்மாள் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்துக்களை வழங்கியுள்ளார் என்றும் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்,

இந்த நான்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் 448 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் இன்றைக்கு கிடைக்கப்பட்டுள்ளது என்றும்

ஒரு ஏக்கர் அளவில் உள்ள நில பத்திரங்களும் கொடுத்துள்ள அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் கூறினார்.

அடுத்த மண்டல மாநாடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாகவும் இதற்கு ஆதரவளித்து வரும்,

தமிழக முதல்வர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.


Spread the love
Exit mobile version