கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருவதால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தின் மதுரை மற்றும் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டத்தில் டெங்கு டெங்குக் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ள, வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நெய்வேலி, முட்டத்தை சேர்ந்த 2 ஆண்கள் என மொத்தம் 6 பேரும் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.