Tamilnadu

பெண்களை தரக்குறைவாக பேசிய பொன்ராஜ்..உடனே வழக்கு போடுங்க டிஜிபி நேரில் வந்த விஜய்!

அரசியல் விமர்சகர் பொன்ராஜ், ஒரு யூடியூப் பேட்டியில் தமிழக வெற்றி கழகத்தை விமர்சிக்கும் போது பெண்களை குறித்து தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த பேச்சுக்கு எதிராக தவெக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் அருண்ராஜ் மற்றும் தலைவர் விஜய் ஆகியோர் இந்த விவகாரத்தை கண்டித்தனர்.

இதுகுறித்து விஜய் தனது சமூக வலைதளப் பதிவில், பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும், இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படிப்பட்ட கருத்துகளை வெளியிடுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று, பொன்ராஜ் மீது அதிகாரப்பூர்வ புகார் அளித்தார். அவருடன் கட்சியின் நிர்வாகி செங்கோட்டையனும் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் வழியாக பெண்களை இழிவாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொன்ராஜ் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *