சமூக வலைதளங்களில் பரவி வரும் தவெகின் உத்தேச அமைச்சர் பட்டியல் குறித்து இணை செயலாளர் சி.டி. நிர்மல்குமார் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், திமுகவினர் திட்டமிட்டு பரப்பும் தவறான பிரச்சாரம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மாற்றத்தைக் கோரி அதிக அளவில் வாக்களித்துள்ளதாக கூறினார்.
இதனால் அச்சமடைந்த திமுகவினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
சைதாப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினர் தாக்கப்பட்டதாகவும், திருச்சியில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் மற்றும் காவல்துறை திமுகவுக்கு சாதகமாக செயல்படுகின்றனர் தாங்கள் அளித்த புகார்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
பொதுமக்கள் வாக்களிக்க தடையாக போக்குவரத்து வசதிகள் குறைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
தற்போதைய அரசை மக்கள் விரும்பவில்லை என்றும், தேர்தல் முடிவுகள் மாற்றத்தை வெளிப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
