மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 25 வயது பெண் தலைமையிலான கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தொடர்ச்சியாக பிடிபட்டதன் விசாரணையில், அதனை சப்ளை செய்து வந்த மணலியைச் சேர்ந்த 25 வயது பெண் தலைமையிலான கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
Also Read : ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!
இளசுகளை அடிமையாகும் போதைப்பொருளை விற்று பணம் சம்பாதிக்கும் இந்த கோர கும்பலை கைது செய்து போலீசார் சிறையில் அடைந்துள்ள நிலையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் பிடிபட்ட மவுபியாவின் தந்தை அக்பர், போதைப்பொருள் வழக்கில் 15 ஆண்டு சிறை தண்டனை பெற்று புழல் சிறையில் உள்ளார். தந்தைக்கு பிறகு கூட்டாளிகளுடன் இணைந்து மகள் சப்ளையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சென்னையின் பல இடங்களில் போதைப்பொருள் விற்று வந்தது அம்பலமாகி உள்ளது.