Site icon ITamilTv

தமிழகத்தில் எடிபன் நிறுவனம் industrial investment

industrial investment

industrial investment

Spread the love

ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ. 540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (industrial investment) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

8 நாட்கள் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னது சொன்னபடி பல தொழில் முதலீடுகளை ஈர்த்து பிப்ரவரி 7-ஆம் தேதி நாளை காலை சென்னை திரும்புகிறார் .

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என்று, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைத்துள்ள

முதல்வர் ஸ்டாலின் மேலும் பல யோசனைகளை முதலீட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தது பேருரை ஆற்றினார்.

மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன

130க்கும் மேற்பட்ட Fortune 500 நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று.

இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் (industrial investment) தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக முதல்வர் தெரிவித்தார்.

மின்சார வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும்

தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது

தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது.

Also Read : https://itamiltv.com/a-heated-argument-between-dmk-and-bjp/

இந்நிலையில் இன்று ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ. 540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஸ்பெயின் நாட்டின் கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் மேப்ட்ரி ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.


Spread the love
Exit mobile version