கடந்த ஆண்டு தமிழகத்தை புரட்டிப்போட்ட பேரிடரில் சிக்கி தவித்த தமிழக மக்களுக்கு நிவாரணம் தர வேண்டும் நிதி கேட்டதற்கு சப்பை கட்டு கட்டிய (Argument) மத்திய பாஜகவை இன்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வெளுத்து வாங்கினார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவை தொடங்கிய சிறிது நேரத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கான உரிய வெள்ள நிவாரணத் தொகையை ஒதுக்காதது குறித்து பேசினார்.
நிதியானந்த ராய் எம்.பி.யாக இருக்கவே தகுதி இல்லை. மத்திய அமைச்சராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஒரு ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் இரண்டு கட்சிக்கு எம்.பி.களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சரை விமர்சித்து டி.ஆர்.பாலு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய (Argument) ஆ.ராசா கூறியதாவது :
தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் பார்க்கிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை, மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின்போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும், இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது.
நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பிற மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியை ஒதுக்கியதை போல் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என ஆ.ராசா தெரிவித்தார்.
Also Read : https://itamiltv.com/king-charles-of-england-is-affected-by-cancer/
குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல, அனைத்து மாநிலங்களுக்கு சமமான வழங்க வேண்டும்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரண நிதி வழங்கும்
நிலையை அளிக்கும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும் என காரசாரமான கருத்துக்களை ஆ.ராசா தெரிவித்தார்.