இங்கிலாந்து King Charles புற்றுநோயால் பாதிப்பு

King Charles
King Charles
Spread the love

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்-க்கு (King Charles) புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது .

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது .

மறைந்த எலிசபத் ராணியின் மகனான மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது உறுதியானதால், நேற்று முதல் அவருக்கு புற்று நோய்க்கான தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

புரோஸ்டேட் என்னும் சிகிச்சைக்கு சென்றபோது மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து மன்னர் சார்லஸ் எந்த விதமான நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

என்னதான் மன்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாலும் அவர் நலமுடன் இருப்பதாகவும் வழக்கமான அவரது வேளைகளில் அவர் முழு ஈடுபாட்டுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது 75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023ஆம் ஆண்டு மன்னராக முடிசூடினார் அவருக்கு ஒருபுறம் எதிருப்புகள் கிளம்பினாலும் மறுபுறம் அவர் ஒரு சிறந்த மன்னராக வருவார் என்று ஆதரவு வலுத்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அரியணையில் ஏறும் மிக வயதான நபராக சார்லஸ் உள்ளார். இவர் குழந்தை பருவத்தில் இருந்து அரண்மனையில் வளர்ந்தாலும், பாரம்பரிய முறைப்படி இவர் தனது கல்வியை அரண்மனையில் கற்கவில்லை.

பல்கலைக்கு சென்று பட்டம் பெற்ற அரசு குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையில் சேர்ந்து பைலட்டாக 7 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார்.

இங்கிலாந்து கடற்படையின் எச்எம்எஸ் பிரானிங்டன் என்ற கண்ணிவெடி அகற்றும் கப்பலின் கமாண்டராக பணியாற்றி 1976-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

கடந்த 1981-ம் ஆண்டு சார்லஸ்-டயானாவை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். இதை டயானா ஏற்றுக் கொண்டதால், இவர்களது திருமணம் 1981-ல் நடந்தது.

முதல் குழந்தை இளவரசர் வில்லியம் 1982-ல் பிறந்தார். இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி 1984-ல் பிறந்தார்.

சில ஆண்டுகளுக்கப் பின் சார்லஸ்-டயானா உறவில் விரிசல் ஏற்பட்டது. சார்லஸின் முன்னாள் காதலி கமீலாதான் இந்த பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது.

கடந்த 1992-ம் ஆண்டு இருவரும் பிரிந்து 1996-ல் விவாகரத்து பெற்றனர். அடுத்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு முன்னாள் காதலி கமீலாவை, இளவரசர் சார்லஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

Also Read : https://itamiltv.com/policeman-killed-trying-to-stop-smuggling/

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப்பின், அரியணை ஏறும் நபராகவும், காமன்வெல்த் தலைவராகவும் இளவரசர் சார்லஸ் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

ராணி 2-ம் எலிசபெத் மறைவால், சம்பிரதாயப்படி, (King Charles) அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசர் சார்லஸை, மன்னர் 3-ம் சார்லஸாக முடிசூடப்பட்டார்


Spread the love
Related Posts