ITamilTv

மாணவர்களே கவனம்…நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு!

NEET NEETExam HallTicket NEETUG2024

Spread the love

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டன.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம்2 மணிக்கு நடக்கிறது. இந்த தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இளங்கலை மருத்துவ படிப்பிற்கான இந்த நீட் நுழைவுத் தேர்விற்கு 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளுத்துகின்றனர்.

இந்த நிலையில், இந்த நீட் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை தரவிறக்கிக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: https://nta.ac.in/

படி 2: “NEET UG 2024 அட்மிட் கார்டு”க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.

படி 4: உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைச் சமர்ப்பித்து அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும்.

இதையும் படிங்க: “உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” – அண்ணாமலை

படி 5: எதிர்கால குறிப்புக்காக அட்மிட் கார்டின் நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேர்வு மையத்திற்கு செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்றிதழுடன் உங்கள் ஹால் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஹால் டிக்கெட்டில், தேர்வரின் பெயர், தேர்வு எண், தேர்வு தேதி மற்றும் நேரம், தேர்வு மைய முகவரி, தேர்வு நாளுக்கான முக்கிய வழிமுறைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

ஹால் டிக்கெட் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு தேசிய தேர்வு முகமை இணையதளத்தைப் பார்க்கவும். ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி டவுன்லோட் செய்துக் கொள்ளவும்.


Spread the love
Exit mobile version