தெலங்கானா மாநிலத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவு பெற உள்ளதால் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் ஆளும் கட்சியும், பிற கட்சிகளும் தங்களது இறுதி கட்ட பரப்புரையை இன்று மேற்கொள்ள உள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற நிலையில் அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் படையெடுத்து வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வேறு எங்கும் கொடுக்காத ஸ்பெஷல் வாக்குறுதிகளை தெலங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் கட்சிகள் அடுக்கடுக்காய் மக்கள் முன் வைத்து வருகின்றனர் .
இந்நிலையில் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது.
மும்முனை போட்டி நடைபெறும் தெலங்கானாவில் வரும் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.