Site icon ITamilTv

TVK எங்கள் கட்சியின் பெயர்!- வேல்முருகன்

TVK

TVK எங்கள் கட்சிப் பெயர் - தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் - வேல்முருகன்

Spread the love

விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. (TVK) என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் velmurugan தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார்.

இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை அறிக்கையாக வெளியிட்ட நடிகர் விஜய் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை பதிவு செய்துள்ள விஜய், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியது குறித்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறனர்.

இந்த நிலையில், விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கூறிய வேல்முருகன், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இதையும் படிங்க : Kovai lady driver : வீடியோ வெளியிட்ட Bus Driver சர்மிளா! சைபர் கிரைம் அதிரடி  

தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே (TVK) என வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் தொடங்கப்பட்டு, கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

https://x.com/ITamilTVNews/status/1755130704336499015?s=20

தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய்-க்கு TVK எனும் பெயரை தேர்தல் ஆணையம் வழங்காது, வேறு பெயரை பரிசீலனை செய்யும்படி அறிவுறுத்தும் எனவும் கூறி இருக்கிறார்


Spread the love
Exit mobile version