ITamilTv

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Spread the love

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக கோவை வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் முதலில் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

இதையடுத்து இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :

“தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது . தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.

அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில் ஆய்வு செய்து வருகிறேன். 13 அரசு துறைகள் வாயிலாக மக்களுக்கு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.


Spread the love
Exit mobile version