Site icon ITamilTv

Love From TVK : வாழ்த்தியவர்களுக்கு அன்பு வணக்கம்

Love From TVK

Love From TVK

Spread the love

என்னையும் என்னால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றி கழக கட்சியையும் பாராட்டி வாழ்த்திய அனைவர்க்கும் எனது (Love From TVK) அன்பான வணக்கம் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் நன்றி தெரிவித்துள்ளார் .

நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என நேற்று முன்தினம் நடிகர் விஜய் பெயர் சூட்டினார்.

தமிழ் திரையுலகில் உச்சம் தோட்ட முன்னணி நடிகாராக இருக்கும் நடிகர் விஜய் சமீப காலமாக பொதுவெளியில் மக்கள் நலனுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த செய்தி ஊரறிந்த உலகறிந்த உண்மை ஆகிவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அண்மையில் சென்னை பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதாகவும், இந்த கட்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சொன்னது சொன்னபடி நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிட விருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாகவும்,

அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் எனவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜயின் இந்த அரசியல் பயணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து நேரிலும் தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து தற்போது தன்னையும் தனது கட்சியையும் வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி கடிதம் ஒன்றை (Love From TVK) விஜய் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்

Also Read : https://itamiltv.com/rameswaram-fishermen-arrested/

அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள்

“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version