ITamilTv

இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Spread the love

summer : ‘எல் நினோ’வின் தாக்கத்தால் இந்தியாவில் கோடை காலத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது :

இந்தியாவில் எல் நினோ தாக்கம் நீடித்து வருவதால் கோடை காலத்தின் போது வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் பல பகுதிகளில் இயல்பை விட, வெப்ப அலை வீசும்

Also Read : https://itamiltv.com/seman-spoke-about-bjp/

மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகவும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில் , சராசரியாக 3 செ.மீ., மழை பதிவாகும் நிலையில், 117 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு இருக்கக்கூடும் என கணித்துள்ளோம் .

கோடை காலம் முடியும் வரை இந்தியாவில் ‘எல் நினோ’வின் (summer) தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் ஆனால் இது மக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பை கொடுக்காது என மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version