Site icon ITamilTv

Himachal car accident-இமாச்சலில்..சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் மாயம்..!

Himachal car accident

Himachal car accident

Spread the love

Himachal car accident –இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ,சென்னை முன்னாள் மேயருமாக பதவி வகித்தவர் சைதை துரைசாமி.இவரது மகன் வெற்றி.மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு சைதை துரைசாமி ,மகன் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது காசாங் நாலா என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புகளை உடைத்து கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.

இதையும் படிங்க:Physical Education-உடற்கல்வி ஆசிரியர் பணி.. நேர்காணல் – முழு விவரம் உள்ளே!

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி உட்பட 3 பெரும் சட்லஜி நதியில் அடித்து செல்லப்பட்டனர்.

மேலும் காரின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநரின் பெயர் தன்சின் என்றும், இமாச்சல பிரதேச மாநில விபிஓ டாபோ என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து இருக்கிறது.

அதே போன்று, சைதை துரைசாமி மகன் வெற்றியுடன் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் காரில் இமாச்சல பிரதேசத்துக்கு பயணித்துள்ளார்.

இந்த விபத்தில் அவரும் படுகாயமடைந்து மீட்கப்பட்டுள்ளார். ஆனால், இவர்களுடன் சென்ற அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்சைதை துரைசாமியின் மகன் வெற்றியை மட்டும் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1754382183890931721?s=20

இதனால் இந்த விபத்தின் போது வெற்றி காரில் இருந்தாரா அல்லது வேறு எங்கும் சென்றாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இருப்பினும், சட்லஜ் நதியில் வெற்றியைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எனவே, இமாச்சலப்பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளானதும்(Himachal car accident),

அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் மாயமாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love
Exit mobile version