Site icon ITamilTv

சிறுமி டானியாவுக்கு Housing Finance

Housing Finance

Housing Finance

Spread the love

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, தமிழக அரசியின் உதவியால் குணமடைந்த சிறுமி டானியாவுக்கு, அரசு வழங்கிய (Housing Finance) வீட்டுமனையில் வீடு கட்ட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது .

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் சௌபாக்கியம் தம்பதியரின் அன்பு மகள் டானியா.

அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்து வந்தது .

இதை தொடர்ந்து உயர் தர சிகிச்சை கொடுக்க அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவுமாறு பலரிடம் உதவி கேட்டுள்ளனர்.

மகளின் மருத்துவ செலவு பணம் கேட்டு யாரும் தராத நிலையில் சிறுபிமி டானியாவுக்கு தமிழக அரசு உதவி கரம் நீட்டியது.

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட என்னிடம் பள்ளியில் இருக்கும் சக மாணவ மனைவிகள் பேசாமல் போகின்றனர் பேசினால் கிண்டல் செய்கின்றனர் என்னால் படிக்க முடியவில்லை என முதல்வரிடம் சிறுமி முறையிட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமி டானியாவின் முழு மருத்துவ செலவை ஏற்றுக்கொண்ட அரசு அவருக்கு உயர் தர சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தது.

சிறுமிக்கு உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் 29.8.2022 அன்று முதல்வர் ஸ்டாலின் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் சிறுமி டானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பாக்கம் கிராமத்தில் வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்

அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுமி டானியாவுக்கு, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்

Also Read : https://itamiltv.com/sk23-movie-started-with-pooja/

பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின்படி, அரசு மானியம் ரூ. 2.10 லட்சம் போக, வீடு கட்டிக் கொள்ள

பயனாளியால் செலுத்தப்பட (Housing Finance) வேண்டிய தொகை ரூ.2 லட்சத்தை, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.


Spread the love
Exit mobile version