Site icon ITamilTv

சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் – உடனடி நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்ட சென்னை மாநகராட்சி..!!

dog bite

dog bite

Spread the love

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த சம்பவத்தைத் ( dog bite ) தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி பட்டியலிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும்.

ஒவ்வொரு செல்லப்பிராணி உரிமையாளரும் ஒரு பூங்காவிற்குள் ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்வது கட்டுப்படுத்தப்படும்.

பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு செல்லப் பிராணிகள் கயிறுகள் மூலம் கட்டப்பட்டு, அதன் வாய்ப்பகுதியானது மூடப்பட்டிருக்க வேண்டும்.

நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும். மேலும், செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தெருநாய்கள் அல்லது கட்டவிழ்த்து விடப்பட்ட நாய்கள் பூங்காவிற்குள் நுழைவது தடுக்கப்படும்.

பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைவது தடைசெய்யப்படும்.

இது தவிர துணை மற்றும் செல்ல நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமங்கள் சரிபார்க்கப்படும்

Also Read : 17 பேரை ஈவிரக்கமின்றி கொன்ற சைக்கோ செவிலி – 760 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்..!!

செல்லப்பிராணி உரிமையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் குடிமை முகமைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் சட்ட நிலைகளுக்கு அப்பால் சென்று, உரிமையாளர்களால் கட்டுப்படுத்தப்படாத விலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பழக்கமான மனிதர்கள் மற்றும் பழக்கப்பட்ட சுற்றுப்புறத்திலும் விலங்குகளின் நடத்தை வேறுபட்டிருக்கும். மேலும், வெளியில் புதிய சூழலில் வரும் போது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை காணும்போது விலங்குகளுக்கு பயம் மற்றும் பதட்ட உணர்வு ஏற்படும். இதனால் விலங்குகளின் நடத்தை முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விலங்குளின் உரிமையாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளியில் வரும் போது கவனத்துடன் விலங்குகளை கையாள வேண்டும்.

வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடை மருத் வர்களின் அறிவுறுத்தலின்படி உரிமையாளர்கள் நாய்களை பராமரிக்க வேண்டும்.

அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் துணை தேவை. ஆனால், சரியான உரிமம் பெற்று அதன் பிறகு இனப்பெருக்கம் செய்து, விற்பனை செய்ய வேண்டும்.

விலங்குகளை வளர்ப்பவர்கள் அதற்கு தேவையான உணவு, இருப்பிடம், தண்ணீர் போன்றவற்றை ( dog bite ) வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version