ஊசி மருந்து செலுத்தி 17 நோயாளிகளைக் கொன்ற குற்றத்துக்காக அமெரிக்காவைச் சோ்ந்த சைக்கோ ( Psycho nurse ) செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தைச் சோ்ந்த ஹெதா் பிரஸ்டீ என்ற 41 வயது செவிலி, 2020-ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை 22 நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்தை அதிக அளவில் செலுத்தியதாகவும் அவா்களில் 17 போ் மரணமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவரால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 43 முதல் 104 வயது வரையிலானவா்கள். தனது நோயாளிகள் மீதான வெறுப்பை பெற்றோா்களிடமும் சக நண்பா்களிடமும் ஹெதா் நீண்ட காலமாகவே வெளிப்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகள் வாழ விரும்பினாலும், அவா்கள் இனி வாழத் தகுதியில்லாதவா்கள் என்று அவரே முடிவு செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹெதருக்கு 760 ஆண்டுகள் வரை ( Psycho nurse ) சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்.