Site icon ITamilTv

”CAA-வை அமலுக்கு கொண்டு வந்த மத்திய அரசு..”பாஜகவின் அடுத்த நகர்வு?

CitizenshipAmendmentAct

CitizenshipAmendmentAct

Spread the love

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் ( CAA-வை CitizenshipAmendmentAct)மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது.இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை அப்போது நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில் இன்று இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறும் முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்!

இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கின்றது.

மேலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்திருத்தத்தினை அமல்படுத்துவதற்கான விதிகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?

▪️ 2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது

▪️ எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை.

இதையும் படிங்க: BREAKING | CAA-வை அமலுக்கு கொண்டு வந்தது ஒன்றிய அரசு!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு ஏன்?

▪️ குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது.

▪️ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.


Spread the love
Exit mobile version