Site icon ITamilTv

வாரணாசியில் மோடி இன்று வேட்புமனு தாக்கல்..

PMModi UttarPradesh LokSabhaElection2024 Nomination Varanasi

PMModi UttarPradesh LokSabhaElection2024 Nomination Varanasi

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் 2024 ஆண்டிற்கான 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் 7வது கட்டமாக வரும் ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: ”ஹிஜாப்பை கழற்று.. முகத்தை காட்டு..” சர்ச்சையை கிளப்பிய ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா!

இதனை தொடர்ந்து வாரணாசியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி களமிறங்க உள்ளார். இதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அஸ்வமேத காட் பகுதியில் கங்கை ஆற்றங்கரையில் பிரதமர் மோடி இன்று காலை வழிபாடு செய்தார்.

இதற்காக நேற்று வாரணாசி சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version