Site icon ITamilTv

ஹரியாணா மாநிலத்தில் மீண்டும் Internet service

Internet service

Internet service

Spread the love

விவசாயிகளின் போரட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை (Internet service) அடுத்து ஹரியாணா மாநிலத்தில் மீண்டும் இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து

மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள்

கடந்த 13 ஆம் தேதி டெல்லி நோக்கி மாபெரும் பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

போராட்டத்தின் தீவிரத்தை அறிந்த ஹரியாணா மாநில முதல்வர் பேரணிக்கு இரண்டு தினங்கள் முன்பாகவே அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதல்,ஜிந்த், ஹிசார்,

ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அந்த பகுதியில் இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி நோக்கி பேரணியாக சென்ற போது அங்கு கலவரம் வெடித்துள்ளது இதில் போலீசார் நடத்திய கண்மூடி தனமான தாக்குதலில் ஒருவர் இளம் விவசாயி உயிரிழந்தார் .

இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை (Internet service) பிப்ரவரி 29-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் .

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுவதுவதாக அறிவித்ததை அடுத்து இணைய சேவை முடக்கப்பட்ட அந்த 7 மாவட்டங்களில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட் டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.

இதனால் மத்திய அரசைக் கண்டித்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கிய நிலையில்

விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதால் போராட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Also Read : https://itamiltv.com/summer-water-status-of-major-lakes/

போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையையும் விவசாயிகள் புறக்கணித்துள்ளனர் .

நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு எப்போது தன ஒரு சுமூக தீர்வு கிடைக்கப்போகிறது என தெரியவில்லை இந்த போராட்டத்தில் இனி ஒரு உயிர் போகக் கூடாது என பிராத்திப்போம்.


Spread the love
Exit mobile version