தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை வெளுத்து (summer) வாங்கிய நிலையில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு மழை வேண்டாம் என வருண பகவானை வேண்டி வந்த மக்கள் இன்று வெளியில் வேண்டவே வேண்டாம் என சூரிய பகவானை கெஞ்சி வருகின்றனர்.
பசுமை செழிக்கும் நமது நாட்டில் கோடை , மழை , காற்று என அணைத்து பருவங்களும் சார்ந்துள்ள நிலையில் இன்றோ அனைத்தும் பருவம் தவறி தங்களது பணியினை செய்து வருகிறது.
இவை அனைத்திற்கும் நாமும் ஒரு காரணம் என பல விஞ்ஞானிகள் சொல்கின்றனர். மரங்களை வெட்டி காடுகளை அழித்து இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி உள்ளோம் என்றும் கூறப்படுகிறது.
இவை அனைத்திற்கு மேல் மழையின் போது அணைகள் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது ஆனால் இன்னும் சில நாட்களில் அணைகளின் நீர் மிகவும், குறைந்து விடுவம் என்ற அச்சம் வந்துள்ளது .
அந்த அளவுக்கு தமிழகத்தில் வெப்பம் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் சில முக்கிய எரிகளின் நீர் நிலவரம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2331 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்.
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 751 மில்லியன் கனஅடியாக உள்ளது.
கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 472 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 77.64% நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் இன்றைய நீர் நிலவரம் – 84.06%
புழல் ஏரியின் இன்றைய நீர் நிலவரம் – 70.64%
பூண்டி ஏரியின் இன்றைய நீர் நிலவரம் – 77.68%
சோழவரம் ஏரியின் இன்றைய நீர் நிலவரம் – 69.47%
கண்ணன்கோட்டை ஏரியின் இன்றைய நீர் நிலவரம் – 94.4%
இந்த கோடையில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவ்வப்போது பெய்யும் கோடை மழை தான் இந்த பருவத்தில் இந்த மழைக்காக அனைவரும் தவமாய் தவமிருந்து காத்திருப்பார்கள்.
ஒரு சொட்டு பூமியில் படாதா என்ற ஏக்கத்தில் (summer) இருக்கும் சூழலில் தற்போது தமிழத்தில் உள்ள சில மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
Also Read : https://itamiltv.com/annamalai-said-all-drug-trafficking-should-be-detected/
கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை
நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.