4வது டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு 192 ரன்களை (5 Wicket Record) இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின் தற்போது மீண்டும் ஒரு சிறப்பான தரமான சாதனையை செய்துள்ளார் .
உலகின் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நம் பாரத நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தீவிரமாக விளையாடி வருகிறது .
இதுவரை இருக்கும் நிலவரத்தின் படி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்த தொடரின் 3 ஆவது டெஸ்ட் போட்டி அஸ்வின் உள்பட பல இந்திய வீரர்களுக்கு உணர்ச்சிகரமான போட்டியாக அமைந்துள்ளது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்து இல்லை .
இந்நிலையில் ராஞ்சியில் நடைபெறும் 4 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறப்பமான தரமான விஷயம் என்னவென்றால் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் மீண்டும் ஒரு தரமான சாதனையினை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 35வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளேவின் (35) சாதனையை தற்போது சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் அசத்தி உள்ளது தற்போது செம ட்ரெண்ட் ஆகி வருகிறது .
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மட்டுமே அஸ்வின் உள்ளபட ஏரளமான இந்திய அணியின் வீரர்கள்
Also Read : https://itamiltv.com/annamalai-said-all-drug-trafficking-should-be-detected/
பல சாதனைகளை செய்து நாட்டிற்கு பெருமை செரித்து வருவது கிரிக்கெட் (5 Wicket Record) ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது
அஸ்வின் படைத்துள்ள இந்த சிறப்பான தரமான சாதனைக்கு இந்நாள் முன்னாள் விளையாட்டு வீரர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.