Site icon ITamilTv

இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோர் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெறுவது கட்டாயம்..!!

Income Tax Clearance Certificate

Income Tax Clearance Certificate

Spread the love

இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோர் வருமான வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வோர் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெறுவது மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மூலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

Also Read : திமுகவில் மூத்த அமைச்சர்களுக்கே துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

அதன்படி அக்டோபர் 1 முதல், இந்தியாவில் வசிக்கும் எவருக்கும் வெளிநாடு செல்லும் முன்பு கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அவர்கள் கணக்குகள் தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்தும் அனுமதிச் சான்றிதழ் தேவைப்படும்.

அந்த நபருக்குச் செலுத்தப்படாத நிலுவை வரிகள் எதுவும் இல்லை அல்லது நிலுவைத் தொகையைச் செலுத்த ஏற்பாடு செய்துள்ளார் என்பதை இந்த சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது.


Spread the love
Exit mobile version