Site icon ITamilTv

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை – கலக்கத்தில் தமிழக அரசியல் களம்..!!

g square

g square

Spread the love

பிரபல கட்டுமான நிறுவனமான G-square நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் (g square) வருமானவரித்துறை அதிகாரிகள், இன்று காலை முதல் தீவிரமாக சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

தற்போது தமிழகத்தி ஆண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் பிரபல கட்டுமான நிறுவனமான G-square நிறுவனம் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது.

கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியின் போது பெரிய அளவில் பரபரப்பில்லாமல் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனம் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிரடியாகக் களமிறங்கியது.

நிலம் விற்பனை தொடர்பாக ஊடகங்களில் அந்த நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்களே இதற்கு சாட்சியாக விளங்கியது. திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் இந்த நிறுவனம் பல நூறு கோடிகளில் வருவாய் ஈட்டியதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் தங்களுக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமும் அளித்திருந்தது.

இந்த நிலையில்தான், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஜிஸ்கொயர் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது, முக்கிய ஆவணங்களும், பலகோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பான இடங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Also Read : https://itamiltv.com/another-raid-in-vijayabaskar-related-places/

ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முஸ்தீபுகளால் தமிழகம் பரபரத்துக் கிடக்கையில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையும் இன்னொரு பக்கம் அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல், சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக (g square) அலுவலகம் மற்றும் தரமணியில் உள்ள தனியார் ஐடி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love
Exit mobile version