ஜெயக்குமார் மர்ம மரணத்தில் விசாரணை முழுமையாக முடியவில்லை என்றும் கூடிய சீக்கிரம் தெளிவான ( I.G. Kannan ) முடிவு கிடைக்கும் என தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறியதாவது :
ஜெயக்குமார் வயிற்றில் 15 x 50 செ.மீ கடப்பா கல் கட்டப்பட்டு இருந்தது; அவரின் வாயில் இரும்பு பிரஷ் வைக்கப்பட்டிருந்தது
முதுகு பகுதிகள் எரியவில்லை என இடைநிலை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது . மீ;மேலும் ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட 32 நபர்களையும் விசாரித்து தகவல் பெற்றுள்ளோம்; விசாரணை முழுமை அடையவில்லை; அறிவியல் ரீதியாக தடயவியல் நிபுணர்களை கொண்டு சோதனை நடத்தி உள்ளோம்.
ஜெயக்குமாரின் கடிதம் குறித்து அறிவியல்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வழக்கில் 10 டிஎஸ்பிகள் கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது; இன்னும் ஒரு வாரத்தில் இதில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்.
ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா என இதுவரை முடிவு செய்யவில்லை; ராமஜெயம் விவகாரத்தில் கொலை என முடிவு செய்தோம்; ஆனால் ஜெயக்குமார் விவகாரத்தில் அப்படி எளிதாக முடிவுக்கு வர முடியவில்லை .
ஜெயக்குமார் விவகாரத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்; ( I.G. Kannan ) ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்துவோம் என தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.