தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவால் தற்போது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வாங்க மக்கள் அனைவரும் ( pet dogs ) தீவிரம் காட்டி வருகின்றனர் .
சென்னையில் கடந்த சில நாட்களாக வளர்ப்பு நாய்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்து தற்போது அச்சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையடுத்து சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளன.
Also Read : 3 நாட்களில் 15 கோடி வசூலை கடந்த ஸ்டார் திரைப்படம் – வெளியான டக்கர் தகவல்..!!
கடந்த 10 மாதத்தில் 272 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் உரிமம் பெற்ற நிலையில் 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளன
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விண்ணப்பித்த 2,300 பேரில், இதுவரை 930 பேருக்கு லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.