நடிகர் கவினின் மாஸான நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் குறித்த தகவல் ( kavin star ) வெளியாகி உள்ளது.
‘டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஸ்டார்’.
கவின் நடிப்பில் கடந்த மே 10 ஆம் தேதி வெளியாகியுள்ள ஸ்டார் படத்தை பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிதுள்ளனர்.
Also Read : +2 தேர்வில் சாதித்த மாணவி பூங்கோதைக்கு, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவச சீட்..!!
இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்க அவருடன் சேர்ந்து லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஸ்டார் படத்தை மக்கள் தருமாரியாகி கொண்டிட வரும் நிலையில் இப்படத்தின் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் 15 கோடி வசூல் செய்துள்ளதாக ( kavin star ) படக்குழு அதிகார்பொர்வ தகவலை வெளியிட்டுள்ளது.