Site icon ITamilTv

Kovai lady driver : வீடியோ வெளியிட்ட Bus Driver சர்மிளா! சைபர் கிரைம் அதிரடி  

Kovai  lady driver

Kovai  lady driver : வீடியோ வெளியிட்ட Bus Driver சர்மிளா! சைபர் கிரைம் அதிரடி

Spread the love

கோவையில் பெண் பேருந்து ஓட்டுனர் (Kovai lady driver) என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவையின் பேருந்து ஓட்டுனர் (Kovai lady driver) என்ற பெயரை பெற்றவர் சர்மிளா.

அவர் பேருந்து ஓட்டுநராக இருந்த பொழுது திமுக எம்.பி. கனிமொழி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அந்த பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அந்த பேருந்தில் பயணம் செய்த திமுக எம்.பி.கனிமொழி சர்மிளாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சர்மிளாவை அவரது பேருந்து நிறுவனத்தில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டார்.

சர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் சர்மிளாவை அழைத்து அவருக்கு காரை அன்பளிப்பாக அளித்திருந்தார்.

இந்த நிலையில் சர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 2 ஆம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும்,

அதனை கேட்டபோது காவல் உதவி ஆய்வாளரை வீடியோ எடுத்த சர்மிளா, அதனை அவரது “Instagram” பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக அவர் மீது புகர் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Actor Vishal அரசியல் வருகை! வதந்திக்கு முற்றுப்புள்ளி : கடைசியில் வைத்த டுவிஸ்ட்!

காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி அளித்த இந்த, புகாரின் பேரில் IPC 506, 509, 66C information technoloy act இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த காருக்குள் இருந்தபடி தான் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரிவை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஓட்டுனர் சர்மிளா.

https://x.com/ITamilTVNews/status/1755139219587297296?s=20

நடிகர் கமலஹாசன் சர்மிளாவிற்கு அன்பளிப்பாக கொடுத்த காரில் இருந்தபடி இன்ஸ்டாவில் வெளியாகி உள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Spread the love
Exit mobile version