Site icon ITamilTv

”இந்தியர்களை அச்சுறுத்தும் நோய்கள்..” மு.க.ஸ்டாலின் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Spread the love

நமது அரசு தொடங்கியுள்ள நலவாழ்வு நடைப்பயிற்சி திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கொட்டும் மழையில்,‘நடப்போம்; நலம் பெறுவோம்‘ எனும் நோக்கில் 8 கிலோமீட்டர் தூரம் நடக்கும் நடைப்பயிற்சி நடைபாதையை தொடங்கி வைத்தார்.

மேலும்,பெசன்ட் நகர் அவென்யூ சாலை, எலியட்ஸ் கடற்கரை வரை இப்பாதை காணப்படுகிறது. இங்கு பொதுமக்களின் வசதிக்கேற்ப, வாகனங்கள் நிறுத்தம், ஓய்வு இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது.

இதற்கு ஆரம்பகட்ட தீர்வாக மருத்துவ உலகம் முன்வைப்பது முறையான நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் தான். எனவே, அனைத்து மாவட்டங்களிலும் நமது அரசு தொடங்கியுள்ள நலவாழ்வு நடைப்பயிற்சி திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version