ITamilTv

பிரதமர் நரேந்திர மோடிக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

Mallikarjuna Karke's letter to Narendra Modi

Spread the love

Mallikarjuna Karke’s letter to Narendra Modi : சத்தீஷ்காரில் பிரசாரத்தின் போது பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசின் ஆபத்துக்குரிய நோக்கங்கள் மீண்டும் நம் முன்னே வெளிவந்துள்ளன என காங்கிரசை தாக்கி பேசினார்.

அதன் பிறகு , பிட்ரோடாவின் பரம்பரை வரி பற்றிய பேச்சுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்பட்டது. மேலும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற விசயங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்தது.

இந்த சூழலில் தான், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது Mallikarjuna Karke’s letter to Narendra Modi,

காங்கிரஸ் கட்சியின் நியாய பத்திரம் ஆனது, அனைத்து சாதி மற்றும் சமூகத்தின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நியாயம் வழங்க கூடிய நோக்கம் கொண்டது என தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க : கம்பமலா பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கக் மிரட்டல்..!!

நியாய பத்ரா என்ற பெயரில் தன்னுடைய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.

குறிப்பிடப்பட்ட விசயங்களில், சில வார்த்தைகளை மட்டும் எடுத்து கொண்டு, வகுப்புவாத பிளவை ஏற்படுத்துவது உங்களுடைய பழக்கம் ஆகவே மாறி விட்டது. இந்த வகையில் பேசி, உங்களுடைய பதவியின் கண்ணியம் குறையும் வகையில் நீங்கள் செயல்படுகிறீர்கள்.

Mallikarjuna Karke's letter to Narendra Modi

உங்களுக்கு ஆலோசனை கூறுபவர்கள் தவறுதலாக தகவல் தெரிவித்து உள்ளனர். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் கூட இல்லாத விசயங்களை பற்றி தவறுதலாக உங்களுக்கு கூறியிருக்கின்றனர்.

எங்களுடைய நியாய பத்திரம் பற்றி விளக்கம் அளிக்க உங்களை நேரில் சந்திப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தரும். அதனால், நாட்டின் பிரதமராக, பொய்யான அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பீர்கள்.

பிரதமர் மோடி, தன்னுடைய சமீபத்திய பேச்சுகளில் கூறிய விசயங்களை பற்றி நான் அதிர்ச்சியடையவோ அல்லது ஆச்சரியமடையவோ இல்லை” என்று எழுதியுள்ளார்.

இதையும் படிங்க : ”குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு..” – மீண்டும் புதுக்கோட்டையில் நடந்த கொடூரம்!


Spread the love
Exit mobile version