அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், RBI, ECI போன்ற தன்னாட்சி அமைப்புகளின் கருத்துக்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தினால் இந்திய இறையாண்மைக்கும், நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவது யார்? என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சமூகவலைதளத்தில் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.அதில்
- அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பல்வேறு வழிமுறைகள் இருந்தும் தேர்தல் பத்திரம் என்னும் புதிய முறையை பிரதமர் மோடி கொண்டு வந்தது ஏன்?
- தேர்தல் பத்திரம் குறித்து நிதி அமைச்சகத்திடம் RBI தெரிவித்த நன்கொடையாளர் இரகசியம் மற்றும் ஜனநாயக வெளிப்படைத்தன்மை குறித்து பரிசீலிக்காதது ஏன்?
- 2017 ஜனவரி 30-ல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குபவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நிதி அமைச்சகம் தெரிவித்தது ஏன்?
- 2017 ஆகஸ்ட் 04, 2017 செப்டம்பர் 27 தேதிகளில், RBI Act பிரிவு 31-ற்கு முரண்பாடாக வேறு நிறுவனங்கள் பண பத்திரங்களை விநியோகிக்க கூடாது என்று RBI கூறிய கருத்தை நிதி அமைச்சகம் நிராகரித்தது ஏன்?
- 2017 செப்டம்பர் 27 அன்று, தேர்தல் பத்திரம், பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-ன் கீழ் பணமோசடிகளை உருவாக்கும் என்று RBI தெரிவித்த கருத்தை நிதி அமைச்சகம் நிராகரித்தது ஏன்?
- 3 வருட சராசரி நிகர லாபத்தில் 7.5 சதவிகிதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நன்கொடை வழங்க முடியும் என்று இருந்த கம்பனிகள் சட்டத்தை திருத்தி லாபம் ஈட்டாத நிறுவனங்களும் நன்கொடை வழங்க வழிவகுத்தது ஏன்?
- தேர்தல் நன்கொடைகளை பெற, வெளிநாட்டு நிதி தொடர்புடைய FEMA சட்டம் திருத்தப்பட்டது ஏன்?
- 2018 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய தேர்தல் பத்திரம், 1 மாதம் முன்கூட்டியே மார்ச் மாதம் வெளியிடப்பட்டது ஏன்?
- எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது ஏன்?
- அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், RBI, ECI போன்ற தன்னாட்சி அமைப்புகளின் கருத்துக்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தினால் இந்திய இறையாண்மைக்கும், நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவது யார்?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.