Site icon ITamilTv

நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான கப்பல் சேவை ஒத்திவைப்பு..!!

shipping service

shipping service

Spread the love

நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்க ( shipping service ) இருந்த நிலையில் சில பல காரணங்காளால் கப்பல் சேவை ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது .

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு முதல் பயணமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது .

தொடக்க நாளை ஒட்டி ஒருநாள் மட்டும் கட்டணம் ₹3000 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு 35 பயணிகள் இலங்கை சென்றடைந்தனர்.

Also Read : யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

இந்நிலையில் வெகு விமர்சையாக தொடங்கப்பட்ட நாகை – இலங்கை இடையேயான சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது .

போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது .

இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது .

அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13ம் தேதி இலங்கைக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கப்பலில் பயணம் செய்ய பல்வேறு தேதிகளில் பலரும் முன்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை மே 13 ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கப்பல் சேவை தற்போது மே 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்திற்கு புதிய கப்பல் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்ட தேதியில் பயணத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 16 ஆம் தேதி வரை பதிவு செய்தோர் கட்டணத்தை திரும்ப ( shipping service ) பெற விரும்பினால் customercare@sailindsri.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version