கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் ( savuku shankar ) வெளியாகி உள்ளது .
தமிழக அரசுக்கு எதிராகவும், திமுகவின் அதிகார மையங்கள் குறித்தும் தொடர்ச்சியாக யூடியூப் சேனல்களில் விமர்சனம் செய்து வந்தவர் யூடியூபர் சவுக்கு சங்கர்.
சமீபத்தில் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த நேர்காணலில், பெண் போலீசார் குறித்தும்,
காவல்துறை அதிகாரிகள் தொடர்பாகவும் அவதூறு கருத்தை பரப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் சுகன்யா, சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். இதன் பேரில் அவதூறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல்,
தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Also Read : கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதையடுத்து, போலீசார், தேனியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்து கோவை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக தேனியில் அவர்களது காரில் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததாக, பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் உள்பட மூவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் ( savuku shankar ) மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான அரசு உத்தரவை சிறை அதிகாரிகள் சவுக்கு சங்கரிடம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.