Site icon ITamilTv

தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

nainar nagendran

nainar nagendran

Spread the love

தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை ( nainar nagendran ) என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் நயினார் நாகயதரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் கொடுத்தனர்.

இதையடுத்து விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி நயினார் நாகயதரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர் ஆனால் நயினார் நேரில் ஆஜராகாமல் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.

Also Read : மக்களே உஷார் சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்..!!

இதையடுத்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் 2ஆவது முறையாக சம்மன் வழங்கினர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது :

ரூ.4 கோடி பறிமுதலான விவகாரத்தில் மே 2ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராவேன்

என்னை முழுவதுமாக குறிவைத்துள்ளனர்; அரசியல் சூழ்ச்சியாகவே இதைப் பார்க்கிறேன்; போலீசார் தங்கள் ( nainar nagendran ) கடமையை செய்கின்றனர்; நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன்.

எனக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version