Site icon ITamilTv

”டெல்லியில் செயற்கை மழை..” டெல்லி அரசு நடவடிக்கை!!

Spread the love

காற்றுமாசு பாதிப்பை கட்டுப்படுத்த செயற்கை மழை பொழிய வைக்க டெல்லி(delhi) அரசு முயற்சி செய்து வருகிறது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.காற்று கடுமையாக மாசுபடுவதற்கு, அண்டை மாநிலங்களில் விவசாய எச்சங்கள் எரிப்பு, கட்டடங்கள் இடிப்பு என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக, கான்பூர் ஐஐடி நிபுணர்களுடன் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் மற்றும் நிதி அமைச்சர் அதிஷி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அந்த கூட்டத்தில் செயற்கை மழை மூலம் காற்றுமாசை கட்டுப்படுத்தலாம் என்ற தீர்வை ஐஐடி நிபுணர்கள் முன் வைத்துள்ளனர்.

முன்னதாக டெல்லியில் காற்றுமாசை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் செயற்கை மழையை உருவாக்க டெல்லி (ஆம் ஆத்மி) அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேலும் மத்திய அரசுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version