Site icon ITamilTv

அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் சாமி தரிசனம்!

ayodhya Ayodhya Ram Temple அயோத்தி droupadi murmu

ayodhya Ayodhya Ram Temple அயோத்தி droupadi murmu

Spread the love

அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் (Ayodhya ram) கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கோவில் 2,000 கோடி மதிப்பில் 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கருவறையில் பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: ”கோடை காலம் தொடங்கியாச்சு.. ” இனி அயோத்தி ராமருக்கு.. – வெளியான அறிவிப்பு!

மேலும் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில், தொழிலதிபர்கள் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் என 8000 ஆயிரத்திரக்கும் மேற்பட்டவர்கள் என கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அயோத்தி சென்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

அதன்பிறகு திரெளபதி முர்மு அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு தரிசனம் மற்றும் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.கோவில் திறந்து 4 மாதங்கள் கழித்து அவர் முதல் முறையாக இன்று கோவிலில் பாலராமரை தரிசனம் செய்தது குறிப்பிடதக்கது.


Spread the love
Exit mobile version