ITamilTv

நடிகர் அஜீத் பிறந்தநாள்; ஜெயக்குமார் வாழ்த்து

ajith 01

Spread the love

சினிமா நடிகர் அஜீத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் அஜீத்குமார் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு திரைநட்சத்திரங்கள், ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அறிக்கைவாயிலாகவும் போன் மூலமாகவும் அஜீத்குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் நடிகர் அஜீத்குமாருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் மறைந்த முன்னாள முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அஜித்குமார் இருப்பது போன்ற படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள அன்பு சகோதரர் அஜித்குமார்‌ அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
விடாமுயற்சியுடன் வெற்றிகள் தொடரட்டும் என்றும் தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சியுடன் வெற்றிகள் தொடரட்டும்!


Spread the love
Exit mobile version