அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,553 உதவி டாக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அவகாசத்தை இரண்டு மாதங்கள் நீட்டித்து, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில், 2,553 உதவி பொது டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, எம்.ஆர்.பி., என்ற மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், மார்ச் மாதம் வெளியிட்டது.
அதில், 2,553 உதவி டாக்டர்கள் பணியிடங்கள் மாதம் 56,100 – 1,77,500 என்ற சம்பள விகிதத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏப்., 24 முதல் மே 15 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்த நிலையில், கால அவகாசத்தை, ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்து, எம்.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., பயிற்சி நிறைவு செய்யும் டாக்டர்களும் விண்ணப்பிக்கும் வகையில், இரண்டு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.