Site icon ITamilTv

ஓபிஎஸ்ஸை பார்த்து ஆடிபோன ஈபிஎஸ்..நேருக்கு நேர் நடந்த சம்பவம்!!ஷாக்கான எடப்பாடி டீம்!

Spread the love

2023 ஆம் ஆண்டிற்கான முதல்ஜனவரி 10 ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டதொடரில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் அதிமுக கட்சி தலைவர்களான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடபாடிபழனிசாமி உள்ளிட்டவர்களுக்கு இருக்கைகள் அருகருக்கே போடபட்டு இருந்தது.இந்த கூட்டத்தொடருக்கு OPS மற்றும் இபிஎஸ் வருகை தந்தனர்.

தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் விளக்கங்கள், நலத் திட்டங்களின் நிலை தொடர்பாக கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர், வாசிக்க ஆரம்பித்தார். இதையடுத்து, உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

அதன் பின்னர் தான், சட்டசபை முதல் கூட்டத்திற்காக தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையில்,

சமூகநீ்தி,சுயமரியாதை,அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம்,
பெண்ணுரிமை,மதநல்லிணக்கம்,பல்லுயிர் ஓம்புதல்,பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,பெருந்தலைவர் காமராசர்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர்,திராவிட மாடல் ஆட்சி,தமிழ்நாடு அமைதிப் பூங்கா,

போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து ஆளுநர் உரையை கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதம் பாடும் முன்பே அவையை விட்டு பாதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

இந்த நிலையில் நாளையும், நாளை மறுநாளும் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற உள்ளது .

இந்த நிலையில் 2ஆம் நாளான நேற்று மறைந்த உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க அதிமுகவினர் கருப்புAdmk with black shirt சட்டையுடன் வந்தனர். ஆளும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் ஆளுநருக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்துள்ளனர்.

அதுபோலவே ஓபிஎஸ் இருக்கை விவகாரம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி குறித்து முடிவு எடுக்காதது உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கமான வெள்ளைச் சட்டை அணிந்தே வருகை தந்துள்ள சம்பவம் எடப்பாடி தரப்பினர் இடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version