ITamilTv

குழுக்கடனை கட்டு; இல்லை செத்து விடு – பைனான்ஸ் ஊழியர்கள் டார்ச்சர்; பெண் தற்கொலை முயற்சி

sucide attembt 04

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கடனை கட்டு இல்லை என்றால் செத்து விடு என பைனான்ஸ் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியட்தால் பெண் ஒருவர் அரளிக்காயை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கோவில்பட்டி அருகே கடலையூரைச் சேர்ந்தவர் காளிமுத்து (65). லேத் பட்டறையில் வேலை செய்து வந்த இவர் 6 மாதங்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். வேலைக்கு செல்லாததால் வாழ்வாதாரம் சிக்கலாக இருந்துள்ளது.
காளிமுத்துவின் மனைவி செண்பகவல்லி (57), கடந்த பதினோரு மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி காமராஜ் சிலை எதிரே இயங்கி வரும் இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்கில் மகளிர் குழு கடனாக ரூ.40,000 பெற்றுள்ளார்.
10 மாதத்திற்கான பணத்தினை கட்டியும் உள்ளார். கடந்த மாதத்திற்கான கடனை கட்டாததால் வங்கி ஊழியர்கள் இருவர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமருக்கு முரசொலி கண்டனம்!

உடனடியாக மாதத் தவணைத் தொகையை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணத்தை செலவிட்டு விட்டதால், வரும் ஞாயிறன்று கடனை தந்துவிடுவதாகக் கூறியுள்ளார்.
அதனை பொருட்படுத்தாத வங்கிஊழியர்கள், செண்பகவள்ளியை தகாத வார்த்தையால் திட்டி அருகே வசிப்பர்களிடம் பணத்தை வாங்கி கடனை அடைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து வீட்டின் அருகே இருந்த சிலரிடம் செண்பகவல்லி கேட்டும் பணம் கிடைக்காததால், மீண்டும் ஊழியர்கள் தகாத வார்த்தைகளைப் பேசி அவமானப்படுத்தி உள்ளனர்.

இதில் மனம் உடைந்த செண்பகவல்லி , தற்கொலை செய்வதாகக் கூறி அருகில் இருந்த அரளிச் செடியிலிருந்த அரளிவிதையை பிடுங்கி வாயில் போட்டு மென்றுள்ளார்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த வங்கி ஊழியர்கள், ஒன்று பணத்தைக் கட்டு இல்லையென்றால் செத்து விடு என ஈவு இரக்கமின்றி கூறியுள்ளனர்.
அப்போது அக்கம்பக்கத்தினர் ஊழியர்களை திட்டி அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் செண்பகவல்லிக்கு புளிக்கரைசலை அருந்தக் கொடுத்து முதலுதவி செய்து பின்னர் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, செண்பகவல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் பிரச்சனையில் வங்கி ஊழியர்களின் அநாகரிக பேச்சால் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version