ITamilTv

மோடிக்கு தடை விதிக்கணுமாம்… எதுக்கு? – இந்திய ஒற்றுகை இயக்கம் மனு

manu 04

Spread the love

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் என்று கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பில் பிரதமருக்கு எதிராக கோவையில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் மனு அளித்துள்ளனர்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் சொத்துக்களில் முதன்மை உரிமை இஸ்லாமியர்களுக்கு தான் உள்ளது என்று சொன்னதாக,
ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி திரித்து மதவெறுப்பு பிரச்சாரத்தை செய்துள்ளார்.

இது போன்ற பேச்சுக்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும்
சமூகத்தில் மத மோதலை தூண்டுவதாகவும் அமைதியை சீர்குலைப்பதாகவும் உள்ளது.
தேர்தல் ஆணையம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்.
அவரை தேர்தலில் நிற்பதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,

இவ்வாறு இந்திய ஒற்றுமை இயக்கத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நேருதாஸ், பேராசிரியர் காமராஜ், டென்னிஸ் கோவில்பிள்ளை ஆகியோர் மனுவினை அளித்துள்ளனர்.

இதையும் படிங்க ; சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது


Spread the love
Exit mobile version