அரசு கொலை செய்வதற்கு ஒப்பாக இருக்கிறது இந்த சம்பவம் என கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது . இதில் கலந்து கொள்வதற்க்காக வருகை தந்த கோவை பாஜக எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வருகின்ற போது படிப்படியாக டாஸ்மாக் குறைப்பதாக தெரிவித்து இருந்தது.
ஆனால் அரசு எப்போதும் மது விற்பனையை மட்டும் நம்பி இருக்கவில்லை. ஆனால் டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பது தான் அரசாங்கத்தின் பதிலாக இருந்து வருகிறது. இது தமிழகத்தில் 2 வது முறை நடக்கும் பெரிய சம்பவம் ஆகும்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் தொடரும் கள்ளசாராய மரணங்கள்.. – அண்ணாமலையின் பரபரப்பு அறிக்கை..!
கிட்டத்தட்ட இந்த சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர் . மேலும் உயிர் பலி அதிகரிக்கரிக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.தொடர்ந்து பேசிய அவர்,
இவ்வள்வு பேர் பாதிக்கக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து கொண்டு இருக்குறது என்றால் , இன்னும் எத்தனை மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்று தெரியவில்லை.
திராவிட மாடல் அரசு என்பது தமிழகத்தை போதையில் தள்ளக்கூடிய அரசாக உள்ளது. குறிப்பாக ஒருபுறம் கஞ்சா போதை பொருள் விற்பனை மறுபுறம் டாஸ்மாக் மூலம் அதிக விதவைகளை உருவாக்கக்கூடிய அரசாக திமுக இருப்பதாக குற்றசாட்டினார்.