ITamilTv

வேலை வாய்ப்பு மோசடி; லிங்க் கிளிக் பண்ணுங்க …. எங்களுக்குப் பணம், உங்களுக்கு….?

CYBER CRIME 1

Spread the love

வேலை வேண்டுமா? இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்க என்று லிங்க்கை அனுப்பி வைத்து அதன்மூலம் பணமோசடியில் ஈடுபட்ட இருவரை ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு போக அதனைப் பயன்படுத்தி, பல்வேறு வகையான மோசடி சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.
ஆன்லைன் வழியாக, பணத்தை அனுப்பும் வசதிகள் என்று வந்ததோ, அன்றே அதே ஆன்லைன் வழியாகப் பணத்தை மோசடி செய்யும் குற்றங்களும் பெருகின.
என்னதான், இணைய மோசடி தொடர்பாக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, இதுபோன்ற மோசடிகள் இன்னமும் தொடர்கதையாகவே உள்ளது.
இந்த நிலையில் வேலை தேடும் இளைஞர்களைக் குறி வைத்தும் ஆன்லைனில் பணமோசடியில் ஈடுபடுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படி பணமோசடியில் ஈடுபட்டமர்மநபர்கள் இருவரை சைபர் க்ரைம் போலீசார் மடக்கி உள்ளனர்.
ஜாப் வேக்கன்சி இருப்பதாகக் கூறி வேலை தேடும் இளைஞர்களை டார்கெட் செய்து மர்ம நபர்கள் இணைய லிங்குகளை அனுப்பி உள்ளனர்..

இதையும் படிங்க: குழுக்கடனை கட்டு; இல்லை செத்து விடு – பைனான்ஸ் ஊழியர்கள் டார்ச்சர்; பெண் தற்கொலை முயற்சி

அப்படி லிங்குகளை க்ளிக் செய்து தங்களது விவரங்களை தெரிவிப்பவர்களிடம் சம்பள பணம் தருவதற்காக வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்டுள்ளனர்.
அதன்படி வங்கி விவரங்களை தெரிவித்த நபர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணம் முழுவதையும் சில நொடிகளிலேயே மர்மநபர்கள் எடுத்துள்ளனர்.
இப்படி பணத்தை ஏமாந்த ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசில் புகார் அளிக்க, ஆன்லைன் மோசடி என்பதால் அதனை போலீசார் விசாரித்தனர்.
அவர்களது விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டது சேலத்தை சேர்ந்த இருவர் என்பதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் இதே போன்று பலரிடமும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, அவர்களிடம் இருந்த 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 7 கைப்பேசிகள், 19 ஏடிஎம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆன்லைன் பண மோசடியில் பணத்தை இழந்துவிட்டால் அதனை மீட்பது மிகவும் கடினம். எனவே மக்கள் தேவையில்லாத, அவசியமில்லாத லிங்குகளை கிளிக் செய்து ஏமாற வேண்டாம் என்று ஈரோடு சைபர் கிரைம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.


Spread the love
Exit mobile version