ITamilTv

ரேசன் அரிசி கடத்தல் வில்லங்கம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசிய திமுக நிர்வாகி

ration rice karthik

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலை காட்டிக் கொடுத்ததாகக் கூறி வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் திமுக நிர்வாகி கூலிப்படையினருடன் வந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாம்பு கார்த்திக். திமுக இளைஞரணி நிர்வாகியான இவர் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.


இதற்காக கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை வீடு வீடாகச் சென்று ரேசன் அரிசியை விலைக்கு வாங்கிவரப் பயன்படுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் அந்த சிறுவன் மறுக்கவே அவரை கார்த்திக் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுவனின் உறவினரான வழக்கறிஞர் மாரிச் செல்வம் என்பவர், கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் பின்விளைவுகள் அதிகரிப்பு – அதிர்ச்சி தகவல்

இதனிடையே மதுரையில் வாகனச் சோதனையில் கார்த்திக் தரப்பு கடத்திச் சென்ற ரேசன் அரிசி பிடிபட்டுள்ளது. இதற்கு மாரிச் செல்வம்தான் காரணம் என்று கார்த்திக் கருதியுள்ளார்.
இதனால் நெல்லை பகுதியைச் சேர்ந்த கூலிப்படையினர் 15க்கும் மேற்பட்டோருடன் 5க்கும் மேற்பட்ட இருசக்கரவாகனங்களில் அதிகாலையில் மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு கார்த்திக் சென்றுள்ளார்.


மாரிச்செல்வத்தின் வீட்டுக்கதவைத் தட்டி திறக்கச்செய்தவர்கள் தங்கள் கையோடு எடுத்துச் சென்ற பெட்ரோல் குண்டுகளை அவரது வீட்டு ஜன்னல் கம்பி மற்றும் சுவற்றில் வீசியுள்ளனர். அவை வெடித்து வீட்டுக்குள் விழுந்து தீப்பற்றியதில் பொருட்கள் சேதமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மக்களே உஷார்..67 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதன்பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.


இதுகுறித்து வழக்கறிஞர் மாரிச்செல்வம் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு சம்பவம் நடந்திருப்பதும், திமுக நிர்வாகியா அதில் ஈடுபட்டிருப்பதும் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பரபரப்புகள் அடங்கிய நிலையில் மீண்டும் ரேசன் அரிசி கடத்தல் விவகாரம் தலை தூக்கியிருப்பதாக அந்தப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தையை கார் ஏற்றிக் கொன்ற தந்தை – வைரலாகும் வீடியோ!


Spread the love
Exit mobile version