ITamilTv

Breaking | கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோரை நலம் விசாரித்த நடிகர் விஜய் !

Kallakurichi Vijay vist

Spread the love

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்தார் .

Kallakurichi Vijay vist

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 143 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் .

105 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 24 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் கள்ளக்குறிச்சி புறப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.


Spread the love
Exit mobile version