ITamilTv

குடும்பமாகச் சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி… ஏலச் சீட்டில் ஏமாந்த 100க்கும் மேற்பட்டோர்…

pondy fraud (2)

Spread the love

புதுச்சேரியில் ஏலச்சீட்டு நடத்தி குடும்பமே கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


புதுச்சேரி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் கோவி என்கிற ரத்தினம் (47). இவரது மனைவி வனிதா (37).
இவர்கள் இருவரும் உறவினர்களான சுரேஷ், முரளி ஆகியோர் உதவியுடன் 4 வகைகளில் மாத ஏலச்சீட்டு நடத்தியுள்ளனர்.
சஞ்சீவி நகர், புதுப்பாக்கம், துருவை, இரும்பை, ஆரோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏலச்சீட்டு நடத்தியுள்ளனர்.
நால்வரும் சேர்ந்து 20 மாத காலம் கொண்ட 3 லட்சம் ரூபாய் ஏலச் சீட்டில் தலா மாதம் 5 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் கூறி என்று 100 பேரைச் சேர்த்து உள்ளனர்.

இதையும் படிங்க: 2.0 திட்டத்தில் ரூ.500 கோடி மோசடி? – திமுக மீது ஜெயகுமார் பகீர் புகார்

4 வகையான சீட்டிற்கான ஏலமும் மாதந்தோறும் 5,7,10,15, ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாதந்தோறும் கோடிக்கணக்கில் சீட்டுத் தொகையைக் கட்டி வந்தனர்.
தொடக்கத்தில், சரியாக ஏலச் சீட்டு நடத்தி பணம் கொடுத்து வந்த கோபி அடுத்தடுத்து மாதங்களில் ஏலம் எடுத்தவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
இப்படி ஓராண்டாக பணம் தராமல் கோபி இழுத்தடித்து வந்ததால் சீட்டுக் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இதனையடுத்து அவர்கள் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் கோபி மற்றும் அவரது மனைவி வனிதா மீது புகார் அளித்தனர்.


இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கோபி உள்பட நால்வரையும் கைது செய்தனர்.
கோபியிடம் நடத்திய விசாரணையில், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து ஒரு கோடியே 31 லட்சம் அளவில் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: பெண் வி.ஏ.ஓ வுக்கு வயிற்றில் உதை…. ஆணையரை மிரட்டி அடாவடி…. அத்து மீறும் திமுகவினர்

மேலும் விசாரணையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக சீட்டுப் பணத்தில், கார், வீடு என ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.
ஏலச் சீட்டு நடத்தி ஒரு குடும்பமே கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ”கர்நாடகாவிற்கு 3454 கோடி.. ஆனா தமிழகத்திற்கு மட்டும் ..” பிரதமரை விமர்சித்த சு.வெங்கடேசன்!


Spread the love
Exit mobile version