பிரசவ நேரத்தில் உயிருக்கு போராடிய கர்ப்பிணி பெண்ணுக்கு கடவுளாய் வந்து காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கண்ணீர் மல்க உறவினர்கள் நன்றி தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்ததுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் -சாரதி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 30-ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், பிரசவத்திற்கு பின்னர் இயல்பாக சுருங்க வேண்டிய கர்ப்பப்பை சுருங்காததன் காரணமாக அந்தப்பெண்ணுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி தாயை மருத்துவர் தினேஷ் முகில் மற்றும் நந்தினி மற்றும் செவிலியர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இதையும் படிங்க: முன் ஜாமீன் மனு தள்ளுபடி; பெலிக்ஸ் மனைவி முதல்வர் தனிப்பிரிவில் புகார்
மிகவும் ஆபத்தான நிலையில் போராடிய தாயை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அந்த பெண்ணின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
எதற்கெடுத்தாலும் அரசு மருத்துவமனையையும் அரசு நிர்வாகத்தையும் குறை கூறும் தற்போதைய நிலையில், அரசு ஊழியர்களாய் பணிபுரிபவர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரி அல்ல.. அவர்களுக்குள்ளும் இரக்கமும் இறையன்பும் இருப்பது, இது போன்ற சம்பவங்கள் மூலம் வெளி உலகிற்கு வெளி வருகிறது.