ITamilTv

எங்க கஷ்டடியில உங்க பசங்க….போலீஸ் பெயரில் மிரட்டல்…டிரெண்டிங்காகும் புது மோசடி

POLICE 1

Spread the love

தங்களது கட்டுபாட்டில் உங்களது மகன், மகள் இருப்பதாக போலீஸ் போலப் பேசி பணத்தை ஏமாற்றும் புதிய மோசடி அரங்கேறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரம் இதுபோன்ற அனாமதேய அழைப்புகளுக்காக அச்சப்படத்தேவையில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த 53 வயது நபர் சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியில் நண்பரோடு இருந்துள்ளார்.
அப்போது காலை 11 மணிக்கு அவரது செல்போனில் வாட்ஸ் அப் அழைப்பில் போலீஸ் எனக்கூறி ஒருவர் பேசியுள்ளார்.
நங்கநல்லூர் நபரின் மகள் உள்பட நால்வரை ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களில் மகளின் புகைப்படத்தோடு செய்தி வெளியிடக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
அப்படி செய்ய வேண்டாம் என்றால் 40ஆயிரம் ரூபாய் பணத்தை ஜீபே மூலம் அனுப்பும்படியும் மிரட்டி உள்ளார்.

இதனால் பதற்றமடைந்த தந்தை, பணம் அனுப்ப முயன்று தவறாகப் ரகசிய நம்பரை போட்டதால் பணம் அனுப்ப இயலவில்லை.
அப்போது வாட்ஸ் அப் நபர், உடனடியாக பணத்தை போடுமாறு கூறி மிரட்டவே தந்தை பதற்றமாகி உள்ளார்.
ஆனாலும் தன்னருகே இருந்த நண்பரிடம் சைகை மூலம் வீட்டில் விசாரிக்கக் கூறி உள்ளார்.
வீட்டில் விசாரித்தபோது கல்லூரிமாணவியான அந்தப் பெண் ஆன்லைன் வகுப்பில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வாட்ஸ் அப் அழைப்பை துண்டித்த தந்தை, இதுகுறித்து அசோக்நகர் சைபர் க்ரைமில் புகார் கொடுத்துள்ளார்.

தற்போது இதுபோன்ற மோசடி அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.
இத்தகைய அனாமதேய அழைப்புகளுக்கு பயப்படாமல், சைபர் க்ரைமின் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
இத்தகைய மோசடி கும்பலை விரைவில் பிடித்துவிடுவதாகவும் அவர் உறுதி தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version