ITamilTv

யூடியூப் சானல் நிர்வாகி கைது – சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பியவர்

felix arrest 01

Spread the love

சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனல் நிர்வாகியை திருச்சி போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.

சென்னையில் செயல்பட்டு வரும், ‘ரெட் பிக்ஸ் யு-டியூப் தனியார் சேனலுக்கு யூடியூபர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்தார். அதில், பெண் போலீசார் குறித்தும், காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்பாகவும் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக சவுக்கு சங்கர் மீது சேலம் மாநகர போலீசின், சோஷியல் மீடியா பிரிவு எஸ்.ஐ., கீதா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து சவுக்கு சங்கர் மீது அவதூறு பரப்புதல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தேனியில் இருந்த சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ‘ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ததையும் நீதிமன்றம் நிராகரித்தது.

அநாகரீகமாக விவாதம் பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்யத் தேடிய திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர், அவரை டில்லியில் வைத்து கைது செய்தனர். அவர் ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளார்.


Spread the love
Exit mobile version